திருவண்ணாமலை முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்
ADDED :2550 days ago
திருவண்ணாமலை: கந்தசஷ்டியை முன்னிட்டு, திருவண்ணாமலை ரவுண்டானா அருகே உள்ள சுப்பிரமணியன் முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கந்தசஷ்டியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கம்பத்திளையனார் முருகன் சன்னதியை 108 முறை சுற்றி வந்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.