சேலம் மாவட்டம், ஸ்ரீவடபத்ரகாளியம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்
ADDED :2514 days ago
மகுடஞ்சாவடி: சேலம் மாவட்டம், கஞ்சமலை, காடையாம் பட்டியிலுள்ள, மேச்சேரி ஸ்ரீவடபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று (நவம்., 14ல்) காலை, 9:30 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் நடக்கிறது. அதை முன்னிட்டு, நேற்று (நவம்., 13ல்) காலை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. தொடர்ந்து, கஞ்சமலை சித்தேஸ்வரர் சுவாமி ஆலயத்திலிருந்து, திரளான பக்தர்கள், தீர்த்தக்குடங்களுடன், ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தை அடைந்தனர். மாலை, வடபத்ரகாளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் யாகசாலை எழுந்தருளல், முதல்கால யாகவேள்வி பூஜை நடந்தது.