அரோகரா கோஷத்துடன் பழநி கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :2575 days ago
பழநி: பழநி மலை கோயிலில், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எனும் சரணகோஷத்துடன் திருக்கல்யாணம் நடந்தது.
கந்தசஷ்டி திருவிழா முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சண்முகவள்ளி தெய்வானைதெற்கு வெளிப்பிரகார மண்டபத்திற்கு எழுந்தருளினர். திருக்கல்யாண சிறப்பு பூஜைகளை, கோயில் குருக்கள் உள்ளிட்டோர் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் சண்முகர் வள்ளி, தெய்வாணை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.