விக்கிரவாண்டி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2576 days ago
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் ஸ்ரீதேவி , பூதேவி உடனுறை வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.வி்க்கிரவாண்டி ஒன்றியம் தும்பூர் ஸ்ரீதேவி , பூதேவி உடனுறை வரதராஜ பெருமாள் கோவில் கிராமபொதுமக்களால் புதியதாக கட்டப்பட்டு நேற்று (நவம்., 14,ல்) கும்பாபிஷேகம் நடந்தது.அதனையொட்டி கடந்த 12 ம் தேதி மாலை கணபதி ஹோமமத்துடன் விழா துவங்கியது. நேற்று (நவம்., 14ல்) காலை 9.15 மணிக்கு மகாபூர்ணாஹூதி முடிந்து காலை 9.45 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 10.01 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.