உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூமாபட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

கூமாபட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: கூமாபட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நேற்று (நவம்., 14ல்) வெகு விமரிசையாக நடந்தது.இதை முன்னிட்டு நேற்று (நவம்., 14ல்) அதிகாலை அம்மனுக்கு கண் திறப்பு நடந்தது. தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருள தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதன்பின் தேரிலிருந்து கோயிலுக்கு எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதன்பின் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். மாலையில் மஞ்சள் நீராட்டு வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !