உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை தீப திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா

தி.மலை தீப திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_86374_173513528.jpgதி.மலை தீப திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_86374_173525671.jpgதி.மலை தீப திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலாதிருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் விழாவில், காலை, 10:00 மணிக்கு, மூஷிக வாகனத்தில் விநாயகர், தங்க சூரிய பிரபை வாகனத்தில், சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. வரும், 20ல், மகா ரத தேரோட்டமும், 23ல், காலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரே பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !