புதுச்சேரி முத்துகுமார சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2715 days ago
புதுச்சேரி: முதலியார்பேட்டை வள்ளி தேவசேனா சமேத முத்துகுமார சுவாமி கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.முதலியார்பேட்டை வள்ளி தேவசேனா சமேத முத்துகுமாரசுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தது. கடந்த, 13ம் தேதி சூரசம்ஹாரமும், 14ம் தேதி திருக்கல்யாண உற்வசம் நடந்தது.இதனை தொடர்ந்து, நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் முத்துகுமார சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.