உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் செல்வ விநாயகர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம்

விழுப்புரம் செல்வ விநாயகர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம்

விழுப்புரம்:விழுப்புரம் சிஸ் நகர் செல்வ விநாயகர் கோவிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
நடந்தது.

விழாவையொட்டி, நேற்று முன்தினம் (நவம்., 14ல்) காலை 7:00 மணிக்கு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவ வரிசை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, இரவு 6:30 மணிக்கு திருக்கல்யாண வைப யாகம், இரவு 9:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று, விழுப்புரம் நடராஜர் தெரு, அங்காளபரமேஸ்வரி பெரியாண்டவர் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமிக்கு திருக்கல்யாணம்
நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !