திண்டிவனம் மகாளேஸ்வரர்கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :2657 days ago
திண்டிவனம்:இரும்பை மகாளேஸ்வரர் கோவிலில், திருக்கல்யாண வைபவம் நடந்தது. வானூர் அருகேயுள்ள இரும்பை கிராமத்தில் மகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சூரசம்ஹாரம் விழா கடந்த வாரம் துவங்கியது. விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்து வந்தது.
முக்கிய விழாவான சூரசம்ஹார விழா கடந்த 13ம் தேதி நடந்தது.இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் 14ம் தேதி மாலை 6:00 மணிக்கு, சுப்ரமணியர்-வள்ளி, தெய்வானைக்கு திருக்கல் யாண வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு, சுவாமி சிறப்பு அலகாரத்தில் காட்சி அளித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.