உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பண்ருட்டி:திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று (நவம்., 15ல்) மாலை மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரிய நாயகி, விநாயகர், சுப்ரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவர் சுப்ரமணியர் வள்ளி, தெய் வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று பண்ருட்டி சோமநாத சுவாமி கோவில் மற்றும் திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவிலிலும் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !