ஊத்துக்கோட்டை அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2660 days ago
ஊத்துக்கோட்டை: பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட அய்யப்பன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.பெரியபாளையம் அடுத்த, ஆரணி, பிஞ்சலார் தெருவில், பக்தர்கள் பங்களிப்புடன், அய்யப்பன் கோவில் கட்டப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில், நேற்று (நவம்., 15ல்) காலை, கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி, இரு தினங்களாக கணபதி பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.இதைத் தொடர்ந்து, நேற்று (நவம்., 15ல்), காலை, 5:50 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.