திருப்பரங்குன்றம், முருகனுக்கு சாந்தாபிஷேகம்
ADDED :2864 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம் நடந்தது.
உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமி முன் தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி சிறப்பு பூஜைகள் நடந்தன. பஞ்ஜகவ்யம், 108 லிட்டர் பால், இளநீர் உட்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சுவாமிக்கு தங்க குடம், தெய்வானைக்கு வெள்ளி குடங்களில் இருந்த புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது.
சந்தனக் காப்பு சாத்துப்படியாகி, புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.