உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புல்மேடு வழியாக சபரிமலை செல்ல இன்று (நவம்., 17ல்) முதல் அனுமதி

புல்மேடு வழியாக சபரிமலை செல்ல இன்று (நவம்., 17ல்) முதல் அனுமதி

சபரிமலை: சபரிமலைக்கு, புல்மேடு வழியாக செல்ல பக்தர்கள் இன்று (நவம்., 17ல்) முதல் அனுமதிக்கப்படுகின்றனர்

கேரளா, இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு, சத்திரம் அருகில் புல்மேடு வழியாக, சபரி மலைக்கு செல்லலாம். புல்மேடு வரை ஜீப்புகளில் சென்று, அங்கிருந்து காட்டுப் பாதையில் 12 கி.மீ. நடந்து பாண்டிதாவளம் வழியாக சன்னிதானத்தை அடையலாம். குறிப்பாக மகர விளக்கின்போது, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் செல்வர்.

புல்மேடு வழியாக செல்ல இன்று (நவம்., 17ல்) முதல் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி சத்திரத்தில் இருந்து தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை செல்லலாம். உப்பு பாறையை 4:00 மணிக்கு முன் கடக்கவில்லை என்றால், அங்கு பக்தர்கள் தங்க வைக்கப்
பட்டு, மறுநாள் காலை அனுப்பி வைக்கப்படுவர்.

பாலிதீன் பை,  பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புல்மேடு - சன்னிதானம் இடையே பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை வனத்துறையினர் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !