உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா மூன்றாம் நாள் விழா

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா மூன்றாம் நாள் விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவில், மூன்றாம் நாளான இரவு அருணாசலேஸ்வரர் ராஜகோபுரம் முன் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா வந்து
பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அத்துடன் இரவு உற்சவத்தில் சிம்ம வாகனத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார்  மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேலும் அன்னம் வாகனத்தில், பராசக்தியம்மன் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இது தவிர  வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில்  வாகனத்தில், வள்ளி தெய்வானையுடன் முருகர், வெள்ளி ரிஷப  வாகனத்தில், சண்டிகேஸ்வரர்   மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !