உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்க பூத வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்க பூத வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த, 14ல் கொடியேற்றத்தடன் தொடங்கி, நேற்று (நவம்., 16ல்) மூன்றாம் நாள் விழா நடந்தது.

காலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம் மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. 10:00 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், தங்க பூத வாகனத்தில சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடந்தது. இரவு, 10:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் விமான த்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சிம்ம வாகனத்தில் உண்ணா முலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், அன்னபட்சி வாகனத்தில் பராசக்தி அம்மன்,  வெள்ளி ரிஷபத்தில் சண்டிகேஸ்வரர், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !