சபரிமலையில் சேவை செய்ய விருப்பமா?
ADDED :2550 days ago
ஈரோடு: சபரிமலை ஐயப்பன் கோவிலில், பக்தர்களுக்கு சேவை செய்ய உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்களுக்கு, ஈரோடு மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
மண்டல பூஜை மற்றும் மகர பூஜையின்போது, பக்தர்களுக்கு சேவை செய்ய, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தொண்டர் படை சார்பில், கல்லூரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள், ஆன்மிக ஈடுபாடு உள்ள இளைஞர்கள் தேர்வு செய்து, ஆண்டுதோறும் அனுப்பி வைக்கப் படுகின்றனர். நடப்பாண்டு சேவை செய்ய மற்றும் சபரிமலையில் அன்னதானம் செய்ய விரும்புவோர், 89734-05331, 75987-45551, 94434-98022 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.