பஞ்செட்டியில் அகத்தீஸ்வரர் கோவிலில், சங்காபிஷேகம்
ADDED :2550 days ago
கும்மிடிப்பூண்டி : பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோவிலில், இன்று (நவம்., 19ல்)கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
கவரைப்பேட்டை அடுத்த, பஞ்செட்டியில், ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. அங்குள்ள சுயம்புலிங்கத்தை, அகத்திய முனிவர் பல காலம் வழிபட்டதால்,
அகத்தீஸ்வரர் என, பெயர் ஏற்பட்டது.பொதுவாக திங்கட்கிழமைகள் (சோமவாரம்), சிவனுக்கு உகந்த நாளாகும். அதிலும், கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில், பஞ்செட்டியில் நடைபெறும்
சங்காபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது.இன்று (நவம்., 19ல்), கார்த்திகை மாத, முதல் சோமவாரம் என்பதால், காலை, 10:00 மணியளவில், ருத்ரயாகம் வளர்க்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் நடைபெறும். கார்த்திகை மாதத்தில் வரும், ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும், பஞ்செட்டி அகத்தீஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.