திருக்கோவிலூர் வினாயகர் கோவிலில் மரக்கன்று நடும் விழா
ADDED :2550 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் சக்தி வினாயகர் கோவில் வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.நாடொப்பனசெய் அமைப்பினர் மற்றும் கோவில்
நிர்வாகத்தினர் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, தொழில் அதிபர் சக்தி தலைமை தாங்கினார். தியாகராஜன் வரவேற்றார். டாக்டர் பால்ராஜ், நாடொப்பனசெய் அமைப்பின் நிர்வாகிகள் கதிர்வேல், கோகுல், சரவணன், பரணி, வீரவேல் முன்னிலை வகித்தனர்.
தொழில் அதிபர் செல்வராஜ் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். கோவில் நிர்வாகிகள் நடராஜன், சிவகுருநாதன், கருப்பன், திருவாணன், நாடொப்பனசெய் நிர்வாகிகள் சூரியா. பர்கத், பாலா, சரவணன், ரமேஷ் கலந்து கொண்டனர். சாந்திபால் நன்றி கூறினார்.