தருமாபுரி ஆஞ்ஜநேயருக்கு 108 பால்குட அபிஷேகம்
ADDED :2484 days ago
புதுச்சேரி: தருமாபுரி ஆபத்ஸஹாய ஆஞ்ஜநேய சுவாமி கோவில், வருடாபிஷேகத்தை முன்னிட்டு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. புதுச்சேரி அருகே தருமாபுரியில் ஆபத்சகாய ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வருடாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி, சிறப்பு பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து, நவகலச ஸ்தாபனமும், விசேஷ மூலமந்திர ஹோமம், 108 பால்குட அபிஷேகம், திருவாராதனம் ஆகியன நடந்தது.ரூபாய் நோட்டு மாலை அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். சீதா, ராமர் கல்யாண உற்சவமும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர், கிராம வாசிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.