ராமேஸ்வரத்தில் இஸ்கான் பக்தர்கள் பஜனை பாடி தரிசனம்
ADDED :2548 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ஐரோப்ப நாடுகளின் இஸ்கான் பக்தர்கள் பஜனை பாடி தரிசனம் செய்தனர்.இஸ்கான் அமைப்பின் ரஷ்யா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மலேசியாவை சேர்ந்த பெண் பக்தர்கள் உள்ளிட்ட 150 பேர் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். இவர்கள் கோயில் ரதவீதியில் ஸ்ரீகிருஷ்ணரின் பஜனை பாடலை பாடி பரவசத்துடன் நடனமாடினர்.பின், சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர். இக்குழுவினர் சென்னை, ஒடிசா, மகாராஷ்டிராவுக்கு புனித பயணம் மேற்கொள்ள உள்ளனர்.