ஸ்ரீவி.ஆண்டாளை தரிசிக்க ஐயப்ப பக்தர்கள் வருகை
ADDED :2549 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்:சபரிமலை சென்று விட்டு ஊர்திரும்பும் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க அதிகளவில் வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் சொந்த கார்,வேன்களிலும், டுரீஸ்ட் பஸ்களிலும் பயணிக்கின்றனர்.
கர்நாடகா, ஆந்திரா பக்தர்கள் சேலம், கோவை, எர்ணாகுளம் வழியாக சபரிமலை சென்று தரிசனம் செய்துவிட்டு, கன்னியாகுமரி, திருசெந்தூர், குற்றாலம், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, ராமேஸ்வரம் என பல்வேறு ஆன்மிக நகரங்களுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். அதன்படி தற்போதும் கார்த்திகை சீசன் துவங்கியுள்ளதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை
சென்றுவிட்டு ஊர் திரும்புகின்றனர். இவர்கள் ஆண்டாள்கோயிலில் தரிசனம் செய்து திரும்பினர்.