உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனமிருந்தால் எல்லாம் உண்டு

மனமிருந்தால் எல்லாம் உண்டு

தோட்டத்தின் ஏறிக் குதித்த சிறுவன் ஒருவன் பழங்களைப் பறித்து பையில் நிரப்பிக் கொண்டான். தோட்டக்காரர் இல்லை என நினைத்துக் கொண்டு மீண்டும் சுவரில் ஏற முயன்றான். ஆனால் தோட்டக்காரர் அவனது கையை இழுத்தார். ’அவ்வளவு தான்... இவர் நம்மை உலுக்கி எடுத்து விடுவார்’ என பதறினான். அந்த நேரத்தில் அவனை ஆதரவாக அழைத்துச் சென்ற தோட்டக்காரர் இன்னொரு பை நிறைய பழங்களைப் பறித்து கொடுத்தார். ’இதையும் கொண்டு போ... பழம் வேண்டுமென்றால் வாசல்வழியாக வந்து கேட்க வேண்டியது தானே! நாளை உன் நண்பர்களையும் அழைத்து வா! பழம் தருகிறேன்” என்றார். சிறுவனுக்கு பேச்சு வரவில்லை. கடவுளும் இப்படித் தான். பிறருக்கு கொடுப்பதற்கு பணத்தை விட மனம் தான் வேண்டும். ’அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்’ என்கிறது பைபிள். ஆம்... மனமிருந்தால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !