கருணையுள்ள நெஞ்சம்
ADDED :2564 days ago
ஒருமுறை ஒரு யூதப்பெண், நாயகத்திற்கு உணவு வழங்கினாள். அவருடன் சென்ற பிஷ்ர்இப்னுவும் அதைச் சாப்பிட்டனர். சாப்பிடும் போதே நாயகம் கையை உயர்த்தி உணவில் விஷம் கலந்திருப்பதாகச் சொன்னார். ஆனால் சாப்பிட்ட பிஷ்ர்இப்னு இறந்தார். அப்பெண்ணை அழைத்து, “ஏன் இப்படி செய்தாய்?” எனக் கேட்டார். அதற்கு அவள், “நீர் இறைவனின் தூதர் என சொல்கிறீர். அது உண்மை என்றால் விஷ உணவு ஏதும் செய்யாது என நம்பினேன்” என்றாள்.
“அந்த பெண்ணைக் கொன்று விடலாமா?” என தோழர்கள் கேட்ட போது மறுத்து விட்டார். கொல்ல வந்தவளுக்கும் கருணை காட்டியவர் நாயகம்.