பயபக்தியுடன் வழிபடவேண்டும் என்று சொல்கிறார்களே. இறைவனிடம் பயப்படுவது சரியா?
ADDED :5029 days ago
நமக்கு மேலான ஒரு சக்தி இருக்கிறது என்ற நிலையில் மனிதன் பயம் கொள்கிறான். ஆனால், இந்த பயம் நீடிப்பதில்லை. கனிந்து பக்தியாக மாறுகிறது. காய் நிலையில் பயம். பழுத்த நிலையில் அன்பால் பக்தனின் மனம் கனிந்து விடுகிறது. இதையே அன்பே சிவம் என்று குறிப்பிடுவர்.