காசியில் தண்டம், கயாவில் பிண்டம் என்பதன் பொருள் என்ன?
ADDED :2564 days ago
பாவம் நீங்கி, புண்ணியம் பெறவும், முன்னோர் ஆசி பெறவும் காசி மற்றும் கயை யாத்திரை செல்கின்றனர். கங்கையில் நீராடி விஸ்வநாதரை தரிசித்த பின், தண்டபாணி (காசியிலுள்ள முருகன்) தரிசிக்க வேண்டும். இங்கு தண்டத்தால் பக்தர்களின் முதுகில் மூன்று முறை மெதுவாக அடிப்பர். இதனால் செய்த பாவத்திற்கான தண்டனை வழங்கி யாத்திரை பலன் கிடைக்கும். கயாவில் திதி கொடுக்கும் போது பிண்டம் வைத்தால் முன்னோர் ஆசி கிடைக்கும். இதையே ’காசியில் தண்டம்; கயாவில் பிண்டம்’ என சொல்வர்.