ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி: போர்வை சாற்றும் வைபவம்
ADDED :2672 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனர் சன்னதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றும் வைபவம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 11 :00 மணிக்கு கோபாலாவிசாலத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, பெரியாழ்வார் மற்றும் 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். அப்போது 108 போர்வைகளை சாற்றி சதீஷ் பட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார். பாலமுகுந்தனின் அரையர் சேவை நடந்தது. பின்னர் வேதபிரான் சுதர்சனன் கைசிகபுராணம் வாசித்தார். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோ மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.