உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சியில் சத்ய சாய்பாபா ஜெயந்தி விழா

பொள்ளாச்சியில் சத்ய சாய்பாபா ஜெயந்தி விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில், சத்ய சாய்பாபாவின், 93வது ஜெயந்தி விழா, வெங்கடேசா காலனி சாய் மதுரம் கோவிலில் நேற்றுமுன்தினம் துவங்கியது.காலை, 6:00 மணிக்கு பிரசாந்தி கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. மாலை, 5:30 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில், பெண்கள், 93 திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்.இரவு, 7:00 மணிக்கு சாய் பஜன் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, வரும், 23ம் தேதி வரை தினமும் காலை, 5:00 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தன பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !