உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சங்காபிஷேக பூஜை

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் சங்காபிஷேக பூஜை

வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 108 சங்காபிஷேக விழா நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், காசிவிஸ்வநாதர் சன்னதியில் கார்த்திகை மாத சங்காபிேஷக விழா நேற்று முன் தினம் மாலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து சங்கு பூஜை, ஹோமம், வேதபாராயணம் ஆகியவை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, 108 வலம்புரி சங்கு அபிஷே பூஜை, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.சங்காபிஷேக விழாவில் வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !