உடுமலை விநாயகர் கோவிலில் கார்த்திகை தீப விழா
ADDED :2549 days ago
உடுமலை: உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், திருக்கார்த்திகை தீப விழாவை யொட்டி, நாளை (நவம்., 22ல்) இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நாளை (நவம்., 22ல்) நடக்கிறது. இதனையொட்டி கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடக்கிறது.கார்த்திகை விழா மன்றம் சார்பில் கோவிலில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு துவங்குவதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.