உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா காப்புக்கட்டு

கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா காப்புக்கட்டு

கீழக்கரை:கீழக்கரை தட்டாந்தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் 8ம் ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா காப்புகட்டுதலுடன்தொடங்கியது. மூலவர் பாலமுருகனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. நவ.,23 (வெள்ளிக்கிழமை) மாலை கோயிலில் பரணி தீபமும், 33 அடி உயர பீடத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தினமும் மாலை 6:00
மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

கோயில் நிர்வாகிகள் ஜெயமாரி மனோகரன், சுதர்சன், காசிநாதன், ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தட்டாந்தோப்பு இந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர்
செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !