நிரம்பியது ஸ்ரீவி., வைத்தியநாதசுவாமி கோயில் தாமரை குளம்
ADDED :2546 days ago
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் தாமரைகுளத்திற்கு மழை நீர் வந்ததையடுத்து பொதுமக்கள் ஆனந்தகுளியல் போட்டு வருகின்றனர். கடந்த மாதம் பெய்தமழையில் இக்கோயில் வாசல் அருகே உள்ள சிவகங்கை தெப்பம் நிறைந்தது. இதையடுத்து எதிரே உள்ள தாமரைகுளத்திற்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு இரு குளங்களிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது . இன்னும் முழு அளவை எட்டாதபோதிலும் தண்ணீர் நிறைந்திருப்பதால் அப்பகுதியினர் அளவில்லா மகிழ்ச்சியடைந்து, ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். இதேபோல் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தின் வடக்கு கரையை பலப்படுத்தி போதிய தண்ணீரை தேக்க ஆண்டாள் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.