உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம்

திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று பரணி தீபம், நாளை, கார்த்திகை தீபம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று மாலை, மலைக்கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதை தொடர்ந்து, நாளை அதிகாலை, கார்த்திகை கிருத்திகை மற்றும் தீபத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். மாலை, 6:00 மணிக்கு, கோவிலின் எதிரில் உள்ள பச்சரிசி மலையில், 100 கிலோ நெய்யில், அகண்ட திரியால் தீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில், மலைக்கோவிலில் மாட வீதியில், சொக்கப்பானையில் தீபம் ஏற்றி, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !