தி.மலை மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் காடா திரிக்கு சிறப்பு பூஜை
ADDED :2546 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் நாளை, 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்படவுள்ளது. 3,500 கிலோ நெய் கொண்டு, 1,000 மீட்டர் காடா துணியில், ராட்சத திரி தயார் செய்து, மஹா தீபம் ஏற்றப்படும். இதற்காக பிரத்யேகமாக, திருப்பூரிலிருந்து முதல் தர பருத்தியில், செய்யப்பட்ட காடா துணி நேற்று கோவிலுக்கு வந்தது. இவற்றிற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவிலில் மூன்றாம் பிரகாரம் வழியாக வலம் வந்து, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. நாளை காலை, 8:00 மணிக்கு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும்.