சிவன் கோவிலில் நிகழ்ச்சி : ஆடை தானத்தால் மகிழ்ச்சி
பந்தலுார்: பந்தலுார் அருகே எருமாடு சிவன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், ஆடை தானம் வழங்கப்பட்டது.பந்தலுார் சிவன் கோவிலில், வி.எச்.பி., தர்மபிரசார் சமிதி இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு, கோவில் கமிட்டி தலைவர் சதானந்தன் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற பேரூர் ஆதின மடாதிபதி மருதாசல அடிகளார், ஏழைகளுக்கு உடைகள் வழங்கி பேசுகையில், நாம் பண்டிகை காலங்களில் புத்தாடை வாங்கும்போது, அதிக விலை கொடுத்து வாங்கும் போது, குறைந்தது இரண்டு ஏழைகளுக்கு வழங்கும் வகையில் ஆடை வாங்க வேண்டும். அதேபோல், வசதியானவர்கள் இரண்டு முறை பயன்படுத்திய துணியை மீண்டும் பயன்படுத்தாமல் வைத்திருப்பார்கள். அவற்றை வீணாக வீசி எறிவதை விட, அதனை நன்றாக துவைத்து, ஏழைகளுக்கு வழங்கினால் பயன்தரும். ஆடை தானம் மிகவும் நல்லது, என்றார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர்.