பிரான்மலை தர்காவில் சந்தனம் பூசும் விழா!
ADDED :5014 days ago
சிங்கம்புணரி : பிரான்மலை ஷேக்அப்துல்லா அவுலியா தர்காவில் சந்தனம் பூசும் விழா நடந்தது.பிரான்மலை ஐந்தூர் கிராமத்தினர் முன்னிலையில் தர்கா தோப்பிலிருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்குடம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. இரவு 12 மணிக்கு ஷேக் அப்துல்லா அவுலியா தர்காவிற்கு குடம் கொண்டு செல்லப்பட்டது.அங்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. லெப்பை மார் குழுத் தலைவர் சேட்முகமது, ஜால் லெப்பை,ஷேக்தாவூத், அப்துல் ரஜாக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.