சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED :2669 days ago
ஓசூர்: கெலமங்கலம் பகுதியில், சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் இருந்து, தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி உள்ளது. இங்கு, சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், 5:15 மணிக்கு வேதபாராயணம், நகர சங்கீர்தனம், 7:00 மணிக்கு, சத்ய சாயி சனாதன தர்ம கொடியேற்றுதல், 8:30 மணிக்கு கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. காலை, 11:30 மணிக்கு பூர்ணாஹூதி, 12:00 மணிக்கு பல்லக்கு உற்சவம், 1:30 மணிக்கு மங்களாரத்தி நடந்தது. இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.