காஞ்சிபுரத்தில் கிருத்திகை சிறப்பு நிகழ்ச்சி
ADDED :2543 days ago
காஞ்சிபுரம்: கார்த்திகை தீபமான நேற்று (நவம்., 23ல்), காஞ்சிபுரம், குமர கோட்டத்தில் கிருத்திகை சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருக்குமர கோட்ட திருக்கோவில் வழிபாட்டுக்குழு சார்பில், காஞ்சிபுரம் குமர கோட்டததில், 282வது கிருத்திகை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.குழு செயலர் வி.சரவணன், கந்தர் அனுபூதி பாராயணம் செய்தார். குகை நமச்சிவாயர் போற்றிய தீபத்திருநாள் என்ற தலைப்பில், அய்யன் பேட்டை கச்சபேஸ்வரர் தேவஸ்தான ஓதுவார், த.தமிழ்செல்வன் சொற்பொழிவாற்றினார்.