உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளுக்கு தைலக்காப்பு

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளுக்கு தைலக்காப்பு

மாமல்லபுரம்: ஸ்தலசயன பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டது.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில், 63வதாக விளங்குகிறது. கிருஷ்ண தேவராயர்  காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோவிலில், ஸ்தலசயன பெருமாள், சுதைச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளார். இத்தகைய சிற்பத்தை, தொடர்ந்து இயற்கை முறையில் பாதுகாக்க கருதி,  ஆண்டுதோறும் தைலக்காப்பு சாற்றப்படும்.தற்போது, கார்த்திகைத் தீப நாளான, நேற்று முன்தினம் இரவு, வேதங்கள் பாராயணம் செய்து, சாம்பிராணி தைலக்காப்பு, சுவாமிக்கு சாற்றப்பட்டது.  வைகுண்ட ஏகாதசி நாள் வரை, தைலக்காப்பு நீடித்து, பக்தர்கள், சுவாமி திருமுகத்தை மட்டுமே, தரிசிக்க இயலும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !