உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை தீபத் திருவிழா கோவில்களில் சிறப்பு பூஜை

கார்த்திகை தீபத் திருவிழா கோவில்களில் சிறப்பு பூஜை

 பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில உள்ள கோவில்களில் கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், கார்த்திகை  தீபத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மாலை மகா தீபம் ஏற்றப்பட்டு, கோவில் வளாகத்தை பக்தர்கள் சுற்றி வந்தனர். ஐயப்பன், மஞ்சள் அம்மன் சன்னதி வளாகத்தில்  உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் தீபம் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபம்  ஏற்றுதல், சொக்கப்பானை கொளுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !