உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலக்கல் கோவிலில் 10,001 தீப வழிபாடு

சூலக்கல் கோவிலில் 10,001 தீப வழிபாடு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில், திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, 10,001 தீபமேற்றி பக்தர்கள் வழிபட்டனர்.கிணத்துக்கடவு, பொள்ளாச்சி  பகுதியில் பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவிலில், கார்த்திகை தீபத் திருநாளான நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில், 10,001 தீபமேற்றி, அம்மனுக்கு சிறப்பு பூஜை  நடந்தது.இரண்டாவது நாளான நேற்றும், கோவிலுக்கு வந்த பக்தர்கள், தீபங்களை ஏற்றி வழிபட்டனர். நேற்று மாலை, கோவிலின் முன்பகுதியில் உள்ள ஜோதி கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. சிறப்பு  அலங்காரத்தில் விநாயகர், அம்மன் அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !