உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுாரில் ஐயப்ப பக்தர்கள் பால்குட ஊர்வலம்

கடலுாரில் ஐயப்ப பக்தர்கள் பால்குட ஊர்வலம்

கடலுார்: கடலுாரில், சபரி கிரீச சஜ்ஜன சேவா சங்கம் சார்பில் பால்குட ஊர்வலம் நடந்தது. கடலுார், மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு, சாலைக்கரை மாரியம்மன் கோவிலில் சபரி கிரீச சஜ்ஜன சேவா சங்கம் சார்பில் ஐயப்பன் சுவாமிக்கு மண்டல மகர கால உற்சவம் நடந்து வருகிறது. இதையொட்டி கடந்த 1ம் தேதி காலை ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணவித்தல், மாலை 6:00 மணிக்கு நெய் அபிஷேகம தீபாராதனை நடந்தது. 21ம் தேதி மாலை 4:30 மணிக்கு கணபதி பூஜை, ேஹாமம் துவங்கியது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு பால் குட ஊர்வலம் நடந்தது. பின்னர் மகா அபிஷேகம், புஷ்பாபிஷேகம், பகல் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. வரும் டிச., 2ம் தேதி காலை 8:00 மணிக்கு ஐயப்பன் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !