உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா பெரியவரின் மகத்துவம் கற்றுத்தந்தது தத்ரூப நாடகம்

மகா பெரியவரின் மகத்துவம் கற்றுத்தந்தது தத்ரூப நாடகம்

கோவை; தினமும் முறுக்கு வாங்கும் பாட்டியிடம், விளையாட்டுத்தனமாக, விலை குறைத்து கேட்கிறான் அந்த சின்னஞ்சிறு, 13 வயது பாலகன். சிறுவனை கடிந்து கொள்ளும் பாட்டி, நீ முறுக்கு வாங்கலனா எனக்கு பொழப்பு நடக்காது பாரு என்றதும், இனிமேல் உன்னிடம் முறுக்கு வாங்க வரமாட்டேன் பாட்டி என்கிறான் அச்சிறுவன். சில நாட்களில் காஞ்சி மடத்தின் பீடாதிபதியாகும் சிறுவன், காஞ்சி மகா பெரியவராக வலம் வருகிறார். இவ்வாறு சுவாரஸ்யமான காட்சிகளுடன் நடந்தது, கோவை கிக்கானி பள்ளியில் இரு நாட்கள் அரங்கேறிய தெய்வத்துள் தெய்வம் மேடை நாடகம்.

மகா பெரியவரின், 100 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை அச்சு அசலாக எடுத்துக்காட்டிய இந்த நாடகத்தில், 13 - 100 வயது வரை நான்கு பேர், பெரியவரின் முகத்தோற்றத்தில் நடித்து அசத்தினர்.பிரபல மேடை கலை இயக்குனர் தோட்டாதரணியின் செட்டுகளில், சென்னை எஸ்.எஸ்., இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம், நாடகத்தை தயாரித்து வழங்கியது. மாண்டலின் ராஜேஷ் இசை அமைக்க, இளங்கோ குமணன் இயக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !