சபரிமலை புனிதம் காக்க உண்ணாவிரதம்
ADDED :2506 days ago
புதுச்சேரி: சபரிமலை புனிதம் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பா.ஜ., தொகுதி தலைவர் 30 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.சபரிமலை புனிதம் காக்கவும், கேரள கம்யூ., அரசின் அராஜக நடவடிக்கையை கண்டித்து, புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில் இன்று (26ம் தேதி) நடத்தும் பந்த் போராட்டத்திற்கு, பொதுமக்களின் ஆதரவு கோரியும், உருளையன்பேட்டை தொகுதி தலைவர் இன்ஜினியர் கணஷே் 30 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தை, நேற்று பகல் 12:00 மணிக்கு துவக்கினார்.காமராஜர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில், உண்ணாவிரதத்தை துவக்கிய அவர், இன்று (26ம் தேதி) மாலை 6:00 மணிக்கு முடிக்கிறார். அவரது உண்ணாவிரதம் மற்றும் மவுன விரத போராட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள் பலரும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.