உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

வரசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், வரசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது.சின்ன காஞ்சிபுரம் வரதராஜபுரத்தில், ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் வரசக்தி விநாயகர் மற்றும் வைத்தீஸ்வரர், நவகிரஹம், அய்யப்பன், துர்க்கையம்மன், சுப்ரமணியர், வராஹியம்மன், சாமுண்டீஸ்வரிக்கு, தனி சன்னிதிகள் உள்ளன.இச்சன்னிதிகள் சீரமைக்கப்பட்டு, நேற்று காலை, 10:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து, வரசக்தி விநாயகர் சன்னிதிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !