உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளபரமேஸ்வரி அம்மன்கோவில் கும்பாபிஷேகம்

அங்காளபரமேஸ்வரி அம்மன்கோவில் கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம், மகாராஜபுரம் ஹவுசிங்போர்டு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 23ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்யாக வாசனம், கோ பூஜை, கணபதி ேஹாமம் மற்றும் முதற்கால பூஜை, வாஸ்து சாந்தி, ப்ரவேச பலி, அங்குரார்பணம் நடந்தது.தொடர்ந்து, 24ம் தேதி காலை இரண்டாம் கால பூஜை, துவாரக பூஜை, மூலமந்திரம் மற்றும் மூன்றாம் கால பூஜை, யந்திர பிரதிஷ்டை, சிலைகள் நிலை நிறுத்தல் நடந்தது.நேற்று காலை 8:30 மணிக்குமேல் கடம் புறப்பாடு, மூலவர் விமானமும், அதை தொடர்ந்து விநாயகர், பாலமுருகன், பரிவார தேவதை கூடிய அங்காளபரமேஸ்வரிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !