பழநி உண்டியலில் ரூ.1.88 கோடி வசூல்
ADDED :2833 days ago
பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில், 30 நாட்களில் ரூ. ஒரு கோடியே 88 லட்சத்து 59 ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி முருகன்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 88 லட்சத்து 59ஆயிரத்து 110 கிடைத்துள்ளது. தங்கம்-815 கிராம், வெள்ளி-10,240 கிராம், வெளிநாட்டு கரன்சிகள்-744 கிடைத்து உள்ளது. இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார், திண்டுக்கல் உதவிஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.