ஐயப்பன் கோவிலில் 108 சங்காபிஷேக பூஜை
திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழாவையொட்டி, வலம்புரி சங்காபிஷேக வழிபாடு நேற்று நடந்தது.ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 59ம் ஆண்டு மண்டல பூஜை விழா, 17ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் கொடியேற்று விழா நடந்தது. நேற்று, மகா கணபதி ேஹாமம், நவகலச அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேக பூஜைகள் நடந்தன.
மாலை, 6:30மணிக்கு, பகவதி சேவை நிகழ்ச்சிகள் நடந்தன.இன்று துவங்கி, 30ம் தேதி வரை, பறையெடுப்பு நிகழ்ச்சியும், தாயம்பகை மேளம், பள்ளி வேட்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. டிச.,1 ம் தேதி, ஆறாட்டு உற்சவ விழா நடக்க உள்ளது. திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் குளத்தில் ஆறாட்டு உற்சவமும், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து, ரத ஊர்வலமும் புறப்படுகிறது.தொடர்ந்து, டிச., 7ம் தேதி மாலை குத்துவிளக்கு பூஜை; 15ம் தேதி மாலை கூட்டு பஜனை; 16ம் தேதி காலை லட்சார்ச்சனை துவக்கம்; 17ம் தேதி மாலை லட்சார்ச்சனை நிறைவு பூஜைகளும், 22ம் தேதி அகண்டநாம பஜனை, 27 ம் தேதி புஷ்ப அலங்காரம், ஜன., 14ம் தேதி மகரவிளக்கு புஷ்ப அலங்கார பூஜைகள் நடக்கின்றன.விழாவுக்கான ஏற்பாடுகளை, ஸ்ரீஐயப்ப பக்த ஜனசங்கம், ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.