உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொண்டாமுத்தூரில் இந்துமுன்னணி ரத யாத்திரை

தொண்டாமுத்தூரில் இந்துமுன்னணி ரத யாத்திரை

தொண்டாமுத்தூர்: இந்து முன்னணி சார்பில் வரும் டிச., 23, 24, 25 ஆகிய தேதிகளில் பல்லடத்தை அடுத்த பொங்கலூரில், 1008 கோபூஜை, 108 அஸ்வபூஜை, கஜபூஜை மற்றும் 16 மகாலட்சுமி மகாயாகம் நடக்கவுள்ளது.இதனையடுத்து, சிவன், பார்வதி கொண்ட ரதம் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களுக்கும், ஊர்வலமாக செல்கிறது. இந்த ரதம், நேற்று (நவம்., 27ல்)தொண்டாமுத்தூர், கெம்பனூர், தேவராயபுரம், விராலியூர், செலம்பனூர் பகுதிகளில் ஊர்வலமாக வந்தது.ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து, யாகத்திற்கான செங்கலை தானமாக வழங்கினர். இறுதியாக, நரசீபுரத்தில் உள்ள தர்மராஜா கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !