மதூரில், சீனிவாச பெருமாள் கோவிலில் சம்ப்ரோக்ஷண விழா
ADDED :2520 days ago
உத்திரமேரூர்: மதூரில், சீனிவாச பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷண விழா, நேற்று (நவம்., 28ல்) நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியம், மதூர் கிராமத்தில் உள்ள பழமையான சீனீவாச பெருமாள் கோவிலில், சில நாட்களுக்கு முன், திருப்பணி முடிந்தது.இதையடுத்து, நேற்று (நவம்., 28ல்) காலை, 6:00 மணிக்கு, கோ பூஜை, விஸ்வரூபம் உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து, 10:00 மணிக்கு, சம்ப்ரோக் ஷண விழா நடந்தது. சுற்று வட்டார கிராம மக்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.