அகஸ்தியர், காகபுஜண்ட மகரிஷி கோவிலில் குருபூஜை விழா
ADDED :2529 days ago
புதுச்சேரி: அகஸ்திய மகரிஷி மற்றும் காகபுஜண்ட மகரிஷி கோவிலில் குருபூஜை விழா நடந்தது. அரியாங்குப்பம் அடுத்த காக்காயந்தோப்பில், லோபாமுத்ரா சமேத அகஸ்திய மகரிஷி மற்றும் பகுளாதேவி சமேத காகபுஜண்ட மகரிஷி கோவில் அமைந்துள்ளது. இங்கு, 14ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. காலையில், மகா குரு ஹோமம், மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து, குரு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், அகஸ்தியர் போற்றி மகா அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. விழாவில் அரசியல் பிரமுகர்களும், பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.